'நளினி'-பதில் தாக்கல் செய்ய மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவு
சென்னை: தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு வரும் 11ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி தன்னை விடுவிக்கக் கோரி கடந்த 2006ம் ஆண்டிலும், சில மாதங்களுக்கு முன்பும் இரு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களையும் நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இன்று இந்த மனுக்கள் மீது இறுதி விசாரணை நடந்தது. அப்போது இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் அவகாசம் கோரினர்.
இதையடுத்து 11ம் தேதி வரை அவகாசம் தந்த நீதிபதி, அன்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடக்கும் என அறிவித்தார்.
இந்த வழக்கில் நளினியின் விடுதலையை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது நினைவுகூறத்தக்கது.
இந்தக் கொலை வழக்கில் முன்னதாக நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை மனு தாக்கல் செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications