டாடாவின் மிகப் பெரிய வளையல்!
ஈரோடு: உலகிலேயே மிகப் பெரிய வளையலை உருவாக்கியுள்ளதாக டைட்டன் தொழில் குழுமத்தின் நகை விற்பனைப் பிரிவான கோல்ட் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 காரட்டினாலான இந்த மிகப் பெரிய தங்க வளையலை ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கோல்ட் பிளஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் எல்.ஆர். நடராஜன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே மிகப் பெரிய வளையல் இதுதான். இதன் சுற்றளவு 1830 மில்லி மீட்டராகும். அகலம் 140 மில்லி மீட்டராகும். எடை 24 ஆயிரத்து 505 கிராம் ஆகும்.
நான்கு 22 காரட் வளையங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வளையங்களும், டாடா நிறுவனத்தின் கொள்கைகளான நம்பிக்கை - நாணயம், வாடிக்கையாளர் திருப்தி, மதிப்பு மற்றும் புதுமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த தங்க வளையல் சுத்தமான 22 காரட்டினால் ஆனது. இந்த வளையலை உருவாக்க 227 மனித நாட்கள் தேவைப்பட்டன. மொத்தம் 30 பேர் சேர்ந்து இதை உருவாக்கினர்.
கோல்ட் பிளஸ் நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் இந்த வளையல் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது என்றார் அவர்
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications