கணக்கெடுப்பு குளறுபடி: பேரையூருக்கு ரூ.40 லட்சம் இழப்பு!
கமுதி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பேரையூர் ஊராட்சிக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
கமுதி யூனியன் பேரையூர் ஊராட்சியில் பேரையூர், மேட்டுப்பட்டியை சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, செங்கோட்டைப் பட்டி, சங்கரப்பன் பட்டி, கீழ வலசை, பேரையூர் காலனி ஆகிய ஊர்கள் அடங்கி உள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டில் இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஆயிரத்து 27 பேர் இருந்தனர். ஆனால் அப்போதைய கணக்கெடுப்பின் போது பேரையூர் ஊராட்சியின் மக்கள் தொகை 2 ஆயிரத்து 551 என்று தவறாக அதிகாரிகள் பதிவு செய்து விட்டனராம்.
இதனால் இந்த ஊராட்சிக்குக் கிடைக்க வேண்டிய பல வசதிகள் கிடைக்காமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் பேரையூர் ஊராட்சிக்கு கிடைக்க வேண்டிய நிதியில் சுமார் ரூ.40 லட்சம் வரை தடைபட்டுள்ளதாம்.
போராட்ட அறிவிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு குளறுபடியைக் கண்டித்தும், மீண்டும் சரியாக கணக்கெடுப்பு நடத்தி பதிவு செய்யக் கோரியும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மற்றும் பஸ் மறியல் நடத்தப் போவதாக ஊராட்சி தலைவர் சதர்ன் பிரபாகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கமுதி தாசில்தார் ரெங்கன் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் சதர்ன் பிரபாகரன், துணைத் தலைவர் பழனிச்சாமி, உறுப்பினர்கள் மோகன், ராஜேசுவரி, செல்வகுமார், பிச்சை, பெருமாள், பொன்னழகு, முனீசுவரி, சப்- இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்ட ராஜன் விரிவாக்க அதிகாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேரையூர் ஊராட்சியில் தவறு இல்லாமல் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்த கலெக்டர், ஆர்.டி.ஓ. ஆகியோர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications