பதவி பறிப்பு: கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் கொதிப்பு
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என அவரது கோஷ்டியினர் எச்சரித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கிருஷ்ணசாமிக்கு சமீபத்தில் கல்தா கொடுக்கப்பட்டது. அவருக்குப் பதில் தங்கபாலு தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். இன்று சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு அடுத்த கட்டடத்தில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடினர்.
தொண்டர்களின் தலைவருக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் இக்கூட்டம் நடந்தது. போளூர் தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் தலைமை ஏற்க கிருஷ்ணசாமியின் மகனும் செய்யாறு எம்.எல்.ஏ.வுமான விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தார்.
விழாவுக்கு வந்த கிருஷ்ணசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்ததுடன் ஆளுயர மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி வாள் பரிசளித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் பலர் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய கட்சி மேலிடத்தை தாக்கிப் பேசினார்கள்.
அவர்கள் கூறுகையில், கிருஷ்ணசாமி தலைவராக பதவியில் இருந்தபோது தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டவர். அதனால் தான் சட்ட மன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு 35 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வலிமையை நிரூபித்துக் காட்டியவர் கிருஷ்ணசாமி.
அதேபோல தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு அவர் மிகப்பெரியவெற்றியை தேடித்தந்தார். இரண்டரை ஆண்டு காலம் கட்சிக்காக சீறிய பணியாற்றிய தலைவருக்கு நாம் இன்று நடத்துகின்ற இந்த பாராட்டு விழா வித்தியாசமான பாராட்டு விழா.
நமக்கு எந்த சொத்தும் கிடையாது. காங்கிரஸ் மைதானமும் நம்மிடம் இல்லை. சத்தியமூர்த்தி பவனும் நம்மிடம் கிடையாது.
நாம் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். நம்முடைய குரல் டெல்லியின் கதவை தட்ட வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா, கிருஷ்ண சாமியை உரிய முறையில் கவுரவிக்க வேண்டும். இதற்காக டெல்லியில் நாம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவும் தயார்.
கோஷ்டி பூசலுக்கு ஆட்படாமல் கட்சியை வளர்க்க பாடுபட்டவர் கிருஷ்ணசாமி. அவரிடம் இருந்து சில சதிகாரர்களால் பதவி பறிக்கப்பட்டது. அப்படி பதவி பறிக்கப்பட்டாலும் அவர் என்றைக்கும் பெருமைக்கு உரியவர்.
அவர் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக தலைவர் பதவியில் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் திமுக வையும், அதிமுகவையும் காணாமல் போக செய்திருப்பார்.
வாழப்பாடி ராமமூர்த்திக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரசுக்காக சிறந்த முறையில் பணியாற்றுபவர் கிருஷ்ணசாமிதான் என்றனர்.
தமிழக காங்கிரஸில் கிருஷ்ணசாமி பெயரில் உருவாகியுள்ள இந்த புதிய கோஷ்டி, தங்கபாலுவின் செயல்பாட்டுக்கு குடைச்சலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications