கொடநாடு எஸ்டேட்டிலிருந்து சென்னை திரும்பினார் ஜெ.

ஏப்ரல் 8ம் தேதி கொடநாடு எஸ்டேட் திரும்பினார் ஜெயலலிதா. அதன் பிறகு அங்கிருந்தபடியே அரசியல் நடத்தி வந்தார். தினசரி அறிக்கைகள் விடுவதும், போராட்டங்களை அறிவிப்பதுமாக இருந்தார்.
ஜெயலலிதா இவ்வாறு கொடநாட்டிலிருந்தபடியே அரசியல் செய்வது குறித்து திமுக விமர்சித்திருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அரசியலில் எந்தத் தவறும் இல்லை என்று விஜயகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா எப்போது திரும்புவார் என அதிமுகவினர் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்தப் பின்னணியில் நேற்று இரவு ஒன்பதே கால் மணியளவில் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா. அவருடன் சசிகலாவும் உடன் வந்தார்.
விமான நிலையத்தில் பெருமளவில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களை நோக்கி கையசைத்த ஜெயலலிதா பின்னர் கார் மூலம் வீடு திரும்பினார்.
ஜெயலலிதா இல்லாததால் கடந்த 4 மாதங்களாக அதிமுகவினரை கட்சியின் தலைமை கழகத்திலும் காண முடியவில்லை.
இந் நிலையில் ஜெயலலிதா ஊர் திரும்பிவிட்டதால் இன்று பல மாநில நிர்வாகிகள் தலைமை கழகத்துக்கு படையெடுத்தனர். வெளியூர்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் சென்னை வந்திருந்தனர். இன்று மாலை அல்லது நாளைக்குள் தலைமை கழக நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications