நாங்குனேரி: தாசில்தாரை கொல்ல முயற்சி!
நெல்லை: நாங்குநேரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட தாசில்தாரை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்றது ஒரு கும்பல். இதனால் பயன்து போய் பின்வாங்கியதால், உயிர் தப்பினார் தாசில்தார்.
வள்ளியூர் மெயின் ரோட்டில் நாங்குநேரி தாசில்தார் செல்வராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டர் வந்தது. டிராக்டரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர்கள் அரிவாள் மற்றும் மண்வெட்டியால் தாக்க முயன்றனர். இதை எதிர்பாராத தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பின்வாங்கினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட டிராக்டரில் இருந்த 5 பேரும் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வள்ளியூர் தலையாரி மகாலிங்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.
மணல் கடத்தலை தடுத்த நாங்குநேரி தாசில்தாரை கும்பல் கொல்ல முயன்ற சம்பவம் வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications