இலவச கேஸ்-பஞ். தலைவரை கண்டித்து சாலை மறியல்
தர்மபுரி: இலவச கேஸ் ஸ்டவ், சிலிண்டெர் இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி பஞ்சாயத்துத் தலைவரை கண்டித்து தர்மபுரி அருகே கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களுக்கு அரசின் இலவச சமையல் கேஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இலவச கேஸ் இணைப்புக்கு 700 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல் கட்டமாக 200 பயனாளிகளுக்கு மட்டும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கேஸ் இணைப்பும் திமுக பஞ்சாயத்து தலைவர் மாதுவுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக பொது மக்கள் கூறினர்.
இதை கண்டித்தும், கேஸ் இணைப்பு உடனடியாக வழங்கக் கோரியும் தர்மபுரி-ஒகேனக்கல் சாலையில் கிராம மக்கள் திடீர் மறியில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவருக்கும் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications