இங்கிலாந்துக்கு தப்பியோடிய தாய்லாந்து மாஜி பிரதமர்!
{image-Thaksin Shinawatra-wife250_12082008.jpg tamil.oneindia.com}பாங்காக்: ஒலிம்பிக் போட்டிகளைக் காண செல்வதாகக் கூறி தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார்.
தாய்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்திய வந்த ஷினாவத்ரா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால், இவரது குடும்பத்தினர் பெரும் ஊழலில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் 2006ம் ஆண்டு குடும்பத்தோடு இவர் வெளிநாடு சென்றபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து இங்கிலாந்தில் வசித்து வந்தார்.
ஆனால், இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் தாய்லாந்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எதிர்கொள்ள குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு திரும்பினர் தக்சின்.
ஆனால், முறைகேடுகளில் ஈடுபட்ட தக்சினின் மனைவி போஜாமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இவர்களது பாஸ்போர்ட்டுகளையும் நீதிமன்றம் முடக்கியது. இதை எதிர்த்து நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் தக்சின்.
இந் நிலையில் ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்காக சீனா செல்ல அனுமதி கேட்டது தக்சின் குடும்பம். நீதிமன்றமும் அனுமதி அளித்து பாஸ்போர்டுகளை விடுவித்தது.
இதையடுத்து சீனா கிளம்ப இருந்த நிலையில் திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
ஆனால், தக்சினும் குடும்பத்தாரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அமெரிக்காவுக்கு விமானத்தில் தப்பினர். அங்கிருந்து சீனா சென்ற அவர்கள், அங்கிருந்து இங்கிலாந்து சென்றுவிட்டனர்.
இங்கிலாந்தில் தக்சினுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. மான்செஸ்டர் கால்பந்து அணியையும் இவர்கள் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தக்சின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தாய்லாந்து நாட்டு நீதிமன்றங்களில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால் நான் நாட்டை விட்டு செல்கிறேன். நாங்கள் இங்கிலாந்தில் வசிக்க இருக்கிறோம். அதிர்ஷ்டம் இருந்தால், நான் தாய்நாட்டுக்கு திரும்புவேன். தாய் மண்ணில் மரணத்தை தழுவுவேன்.
தாய்லாந்து அரசியலில் சர்வாதிகாரம் தான் நீடிக்கிறது. அது நீதித்துறையிலும் தலையிடுகிறது என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications