முஷாரப் மீது இன்று கண்டன தீர்மானம்-வெல்லுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று கண்டன தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
சர்தாரி தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஆட்சிக்கு ஆதரவு தந்து வரும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்து இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன.
இதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை துவங்குகிறது.
அதே போல நாட்டின் 4 மாகாணங்களிலும் உள்ள சட்டசபைகளிலும் முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இதில் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே இந்தத் தீர்மானம் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இங்கு முதல்வராக இருப்பது நவாஸ் ஷெரீபின் தம்பி சாபாஸ் ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்தில் முஷாரபுக்கு எதிராக 321 வாக்குகளும் ஆதரவாக வெறும் 25 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன. இதே நிலை தான் பிற 3 மாகாணங்களிலும் ஏற்படும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானம் தொடர்பாக ஆளும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு பின்னர் சட்ட அமைச்சர் பரூக் கூறுகையில், முஷாரப் மீது ஆதாரப்பூர்வமான குற்றப் பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அவர் தப்ப முடியாது. எனவே, அவராகவே தனது பதவியை ராஜினாமா செய்வது நல்லது என்றார்.
ஆனால், இந்த கண்டன தீர்மானத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக முஷாரப் மீண்டும் அறிவித்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் முஷாரப் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளபதியாக இருந்தபோது நாட்டின் பிரதமராக இருந்த ஷெரீபுக்கே தெரியாமல் கார்கிலில் போரைத் தொடுத்தவர்.
பாகிஸ்தானின் 61 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக கண்டனத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் முதல் அதிபர் பர்வேஸ் தான்.
இந்த கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் தேசிய சபை மற்றும் செனட் சபை அடங்கிய கூட்டு கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி ஆதரவு தேவை. தேசிய சபையில் 342 உறுப்பினர்களும், செனட் சபையில் 100 உறுப்பினர்களும், மொத்தம் 442 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில், கண்டனத் தீர்மானம் வெற்றி பெற 295 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால், முஷாரப் எதிர்ப்பு கட்சிகளுக்கு தேசிய சபையில் 235 உறுப்பினர்களும், செனட் சபையில் 39 உறுப்பினர்களுமாக மொத்தம் 274 உறுப்பினர்களின் ஆதரவுதான் உள்ளது.
ஆனாலும் போதுமான மெஜாரிட்டி பலம் உள்ளதாக சர்தாரி கூறியுள்ளார். போதுமான ஆதரவை திரட்டிய பிறகுதான் கண்டனத் தீர்மான நடவடிக்கையை தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
முஷரப்பை ஆதரிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) பிரிவை சேர்ந்த பல எம்.பிக்களும், முஷரப்புக்கு எதிராக வாக்களிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தத் தீர்மானத்தின் மீது சில நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications