காங்கிரஸை திமுக நம்பக் கூடாது-நல்லக்கண்ணு
திருச்சி: காங்கிரஸை நம்பி கருணாநிதி எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு காரணமே, குறைந்தபட்ச வேலை திட்டம், மதவாதத்தை ஒழிப்பது, விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, ஊழலை ஒழிப்பது ஆகிய காரணங்களை முன் வைத்துத் தான். ஆனால் இவற்றை எல்லாம் காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டுவிட்டது.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. காய்கறி வாங்கும்போது கொசுறு என்று கொடுக்கப்பட்ட கொத்த மல்லி இன்று ரூ.1.20க்கு விற்கப்படுகிறது. இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வே காரணம்.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் இங்கு பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்கவில்லை. அமெரிக்கா புகுந்த நாடு உறுப்படாது. அப்படிப்பட்ட அமெரிக்காவிடம் இந்தியாவை அடமானம் வைக்க சிலர் துடிக்கின்றனர்.
நடக்கும் உண்மையைத்தான் கம்யூனிஸ்ட்கள் பேசுவோம். இப்படிப்பட்ட காங்கிரஸை நம்பி திமுக தலைவர் கருணாநிதி எந்த முடிவும் எடுக்க கூடாது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications