ஓமனில் கட்டட வேலை-தமிழகத்தில் நேர்முகத் தேர்வு!
சென்னை: ஓமன் நாட்டில் கட்டடத் தொழிலாளர் வேலைவாய்ப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.
இதுகுறித்து சென்னை சேத்துப்பட்டில் இயங்கும் தமிழக அரசின், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓமன் நிறுவனத்துக்கு டைல்ஸ், மார்பிள், செங்கல் வேலை, பிளாஸ்டரிங் போன்ற ஏதேனும் ஒன்றில் 8 ஆண்டுக்கு மேல் அனுபவம் பெற்ற கொத்தனார்கள், 10 ஆண்டு அனுபவமுள்ள சென்ட்ரிங் கார்பென்டர்கள், பார் பெண்டர்கள் (கம்பி வளைப்பவர்கள்) தேவைப்படுகின்றனர்.
ஐடிஐ தேர்ச்சி பெற்ற 5 ஆண்டு அனுபவமுள்ள எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்களும் தேவைப்படுகின்றனர். மேலும், 8 ஆண்டுக்கு மேல் அனுபவம் பெற்ற சிவில் பி.இ பட்டம் பெற்ற புராஜக்ட் இன்ஜினியர்கள், எச்விஏசி பிரிவில் அனுபவம் பெற்ற புராஜக்ட் இன்ஜினியர்கள், டியூசிடி பேப்ரிகேட்டர்களும் தேவைப்படுகின்றனர்.
இந்தப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக வரும் 21ம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியத்திலும், 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பட்டணம், தாஜ் திருமண மகாலிலும்,
24ம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மெக்டொனால்டு சாலையில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலிலும் (ஜென்னி ஹோட்டல்) 25ம் தேதி சென்னை அம்பத்தூர் பாடியில் உள்ள எம்டிஎச் சாலையில் உள்ள வெங்கடசேஷ மகாலிலும் நடைபெற இருக்கிறது.
தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பம், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் 2 நகல்களுடன் 5 பாஸ்போர்ட் புகைப்படத்தை இணைத்து தங்களுக்கு அருகிலுள்ள ஏதேனும் நேர்முகத் தேர்வு மையத்துக்கு செல்லலாம்.
மேலும் விவரங்கள் அறிய 044 -24464268/69 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications