இலவச கலர் டிவி: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் இலவசங்கள் சட்டப்படி அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, வெற்றி பெற்றால் இலவசமாக கலர் டிவி தருவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. தேர்தலில் அறிவிப்புகளில் இலவசங்கள் சகஜம்தான் என்றாலும், இலவச கலர் டிவி திட்டம் அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்த நிலையில், இலவச கலர் டிவிக்காக அரசு நிதியில் இருந்து ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பணத்தில் அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி சுப்ரமணிய பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஜே.எம்.பாஞ்சல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசியல் கட்சிகளின் இதுபோன்ற தேவையற்ற வாக்குறுதிகள் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மேலும் இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்களின் பணத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மாணவர்களுக்கு பஸ் கட்டணம் குறைப்பு, இலவச புத்தகம் போன்ற சலுகைகள் வரவேற்கக் கூடியது.
ஆனால் கலர் டிவி வழங்குவது எந்த வகையிலும் நியாமானதாக தெரியவில்லை. திமுகவுக்கு போட்டியாக இறங்கிய மற்றொரு கட்சி 12ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இதை கேட்ட நீதிபதி சதாசிவம், டிவி என்பது தேவையற்ற ஒன்று என்று கூற முடியாது. கிராமப்புற மக்களுக்கு தகவல் தொடர்பு சாதனமாக டிவி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றார். அதை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் ஆமோதித்தார்.
இருப்பினும் இதுபோன்ற தேர்தல் இலவசங்கள் 282வது சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது ஆராயப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து இலவச கலர் டிவி வழங்குவது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications