பி.இ கவுன்சிலிங்-புதிதாக விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி நாள்
சென்னை: பிளஸ் டூ துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழக அரசு கல்வி நலனில் அக்கறை கொண்டு, பிளஸ் டூ தேர்வில் மார்ச் மாதம் தோல்வி அடைந்தால் உடனடியாக தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் அந்த வருடமே உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த வருடம் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு துணைதேர்வு நடத்தப்பட்டு முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்ஜினியரிங் படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
அதற்கான விண்ணப்பப்படிவங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 21ம் தேதி கடைசி நாள். ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
தற்போது நடைபெறுகிற 2வது கட்ட கவுன்சிலிங் இன்று (ஆக.14) முடிவடைகிறது. 3வது கட்ட கவுன்சிலிங் வரும் 16ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடக்கிறது. அதன்பிறகு சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இனிமேல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த வருடம் புதிதாக சில இன்ஜினியரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாணவர்கள் பலர் சேரவில்லை. அவற்றில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள் காலியாக உள்ளன. இந்தாண்டு 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications