ரூ1,808 கோடியில் சென்னை விமான நிலைய விரிவாக்கம்
டெல்லி: ரூ. 1808 கோடி மதிப்பிலான சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2010ம் ஆண்டில் விரிவாக்கப் பணிகள் முடிவடையும்.
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த பின்னர் சென்னை விமான நிலைய பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கை ஆண்டுக்கு 1.4 கோடியாக உயரும்.
சர்வதேச தரத்துடன் விரிவுபடுத்தப்படவுள்ள சென்னை விமான நிலையத்தில், மிகப் பெரிய விமானங்கள் வந்து இறங்குவதற்கேற்ற வகையில் செகன்டரி ரன்வே விரிவாக்கப்படும். இதுதவிர கூடுதல் பார்க்கிங் வசதி, டேக்ஸிவே உள்ளிட்டவை உருவாக்கப்படும்.
தற்போதுள்ள செகன்டரி ரன்வே 832 மீட்டர் அதிகரிக்கப்பட்டு, 2917 மீட்டர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்படும். இதற்காக மாநில அரசு அடையார் ஆற்றின் குறுக்கே 130 ஏக்கர் நிலத்ைதக் கொடுத்துள்ளது.
செகன்டரி ரன்வே விரிவாக்கம் மற்றும் அடையாற்றின் மீது பாலம் அமைப்பதற்காக ரூ. 310 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
டேக்ஸிவே ரூ. 150 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். மற்ற பணிகளுக்கு ரூ 75 கோடி ஒதுக்கப்படவுள்ளது. இதுதவிர விமான நிலையம் தொடர்பான பிற பணிகளுக்கு ரூ. 535 செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு ஒரு மணிநேரத்திற்கு 50 விமானங்கள் வந்து, ெசல்லும் வாய்ப்பு ஏற்படும். தற்போது ஒரு மணி நேரத்திற்கு 25 விமானங்கள் மட்டுமே கையாளப்படுகிறது.
காமராஜர் உள்நாட்டு முனையத்தில் தற்போது ஆண்டுக்கு 1 கோடி பயணிகள் போக்குவரத்து நடைபெறுகிறது. இதை 1.6 கோடியாக உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சர்வதேச முனையத்திலும் அதே அளவிலான பயணிகள் தற்போது கையாளப்படுகிறார்கள். அது 1.4 கோடியாக உயரும்.
உள்நாட்டு முனையம், சர்வதேச முனைய விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 1077.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய கார் பார்க்கிங் சர்வதேச தரத்தில் அடுக்குமாடிக் கார் பார்க்கிங்காக மாற்றப்படவுள்ளது. இதற்கு மட்டும் ரூ. 195.84 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையகம் இந்த விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
திட்டச் செலவில் 80 சதவீதத்ைத (ரூ. 1446.4 கோடி) இந்திய விமான நிலைய ஆணையகமும், மீதமுள்ள 20 சதவீதத்தை (ரூ. 361.6 கோடி) கடன்கள் மூலமும் திரட்டப்படும்.
கடந்த மாதம் இந்தத்திட்டத்திற்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இறுதி ஒப்புதலை அளித்தது. நேற்று மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கியது. இந்தத் தகவலை நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விரிவாக்கப் பணிகளுக்குப் பின்னர் டெல்லி, மும்பை விமான நிலையங்களின் வரிசையில் சென்னையும் இணையும்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications