20 வருடங்களாக பென்சனுக்காக போராடும் பெண் தியாகி!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் தியாகி அழகப்பிள்ளை. இவர் வீரவாஞ்சிநாதனின் நெருங்கிய நண்பர். 1911-ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் வீரவாஞ்சிநாதன் நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த வில்லியம் ராபர்ட் ஆஷ்துரையை சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இக்கொலை வழக்கு அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லை சதி வழக்கு என பெயரிடப்பட்டு 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் அழகப்பபிள்ளை. இவரது மகள் கோதையம்மாள்.
இவர் சிறுவயதிலேயே தனது தந்தையோடு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் போது போலீசின் கெடுபிடி...துன்புறுத்தல் காரணமாக செங்கல்பட்டி வீரராகவபுரத்தின் காட்டு பகுதியில் தலைமறைவு வாழ்க்கை.....வீட்டு சிறை...
நெல்லை கொக்கிரகுளம் சிறைச்சாலையில் 1942-ல் நடைபெற்ற பஞ்சாப் சதி வழக்கு, 1931 உப்பு சத்தியாகிரகம், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கால கட்டத்தில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
ஆஷ்துரை கொலை வழக்கில், வழக்கு செலவுக்காக சொத்துகளை இழந்து இன்று வறுமையோடு போராடி வரும் இவர் தனக்கு பென்சன் வழங்க கோரி கடந்த 20 ஆண்டுகாலமாக மனுக்கள் மூலம் அரசின் செவிகளுக்கு தன் நிலையை எடுத்துக் கூறியும் திமுக, அதிமுக என இரு அரசுகளும் எந்த உதவியும் செய்யாமல் வெரும் ரூ.500-ஐ மட்டும் உதவித் தொகையாக வழங்கி வருகிறது.
தனக்கு தியாகி பென்சன் ரூ.3,500-ஐ வழங்கக் கோரி பல்வேறு சாத்விக வழியை பின்பற்றியும் இவரது வறிய நிலையை கண்டு 'வாழும் வள்ளுவர்'களோ...'ஜான்சி ராணி'களோ கண்டு கொள்ளவில்லை.
உரிய சான்றுகள் வழங்கியும் அதிகாரிகள் ஏனோ சுதந்திரத்திற்காக போராடி வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை புறக்கணித்து வருகின்றனர். ஆட்சி...அதிகாரிகள்... மாறி மாறி வந்து விசாரணை செய்தும் இதுவரை இவரது வறுமை நிலையை எண்ணி யாரும் வருத்தப்பட்டு வழி செய்யாமல் தடையை மட்டுமே உருவாக்கி வருகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
தனது போராட்டம் குறித்து கோதையம்மாள் கூறுகையில், தென்காசி எம்எல்ஏ, எம்பி, சபாநாயகர், அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் வரை மனு அனுப்பியுள்ளேன். ஆனால் எனது கோரிக்கை ஏனோ நிராகரிக்கப்பட்டு வருகிறது.
வறுமையில் உள்ளதால்தான் அரசிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வளமான குடும்பத்தில் பிறந்து வறுமையோடு இந்த 85 வயதிலும் போராடி வருகிறேன்.
நான் கண் மூடுவதற்கு முன் அரசு எனக்கு உதவி தொகை வழங்க வேண்டும். 61-வது சுதந்திர தினத்தில் எனக்கு ரூ.3500 பென்சன் கிடைக்குமா...என்கிறார் ஏக்கத்தோடு.
கண்ணீரும், செந்நீரும் சிந்தி நாட்டுக்காக விடுதலை பெற்றுத் தந்த லட்சோபம் லட்சம் தியாகிகளில் ஒரு துளியான கோதையம்மாளின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கப் போவது யாரோ?
அவரது முகவரி:
ஈ. கோதையம்மாள்
239-141 சேர்வைக்காரன் புதுத் தெரு,
செங்கோட்டை-627809.
திருநெல்வேலி மாவட்டம்.
போன்-04633235517
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications