கும்பகோணம்-கோவை ஜனசதாப்தி ரயில் துவக்கம்
மயிலாடுதுறை: ரயில்வேயின் சில திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள் 50 சதவீத நிதியை ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில் கும்பகோணம் -கோவை செல்லும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதி்ல் கலந்து கொண்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு பேசியதாவது:
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறை வரை நீடிக்க செய்யும் கோரிக்கை பரிசீலிக்கப்படும். மயிலாடுதுறை-விழுப்புரம் அகல ரயில் பாதை பணியில் நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் பாலம் கட்டும் வேலை மட்டும் நிறைவு பெற்றாமல் உள்ளது. அந்தப் பணி டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவி்டும்.
இதனால் ஏற்படும் சிரமத்தை தடுக்க சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு வரும் அக்டோபர் முதல் ரயில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி வரை பாசஞ்சர் ரயில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தரங்கை வரை ரயில் பாதை ஏற்படுத்தி அதை நாகூர் வரை நீடித்தால் அதன் மூலம் திருக்கடையூர், திருநள்ளாறு, நாகூர், வேளாங்கன்னி என அனைத்து மத கோவில்களுக்கும் வட மாநில மக்கள் செல்ல வசதியாக இருக்கும். அந்த ரயிலுக்கு மதசார்பின்மை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறினார்.
இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள் 50 சதவீத நிதியை ஏற்றுக் கொண்டால் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications