ஐ.டி. சவாலை சந்திக்க தபால்துறையின் 'அம்பு'!
டெல்லி: தகவல் தொழில்நுட்ப விஸ்வரூபத்தால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளித்து, கிராமப்புற தபால் நிலையங்கள் சிறப்பாக செயல்படும் வகையில், தபால்துறை சார்பில் அம்பு திட்டம் (Arrow project) என்ற வித்தியாசமான திட்டம் தொடங்கபப்ட்டுள்ளது.
இமெயில், எஸ்.எம்.எஸ். ஆகியவை வந்து விட்டதால் தபால் எழுதும் பழக்கம் பெருமளவில் குறைந்து போய் விட்டது. மேலும், தந்தி அனுப்புவதும் இப்போது அறவே நின்று போய் விட்டது.
இதனால் நாடு முழுவதும் தபால் துறை தடுமாறி வருகிறது. முன்பெல்லாம் தபால் நிலையங்களில் அலை மோதிய கூட்டம் இப்போது வெகுவாக குறைந்து போய் விட்டது.
இதையடுத்து தபால்துறையை நிலை நிறுத்தும் வகையிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தபால் நிலையங்களை மேம்படுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், அம்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை தபால் துறை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அளவிலான கிராமப்புற தபால் நிலையங்கள் தேர்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் தபால் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மெருகூட்டப்படும். அங்கு வெறும் தபால் தலைகள், கார்டுகள், லெட்டர்கள் விற்பனை மட்டுமல்லாமல் வங்கிப் பணிகள், பண பரிமாற்றம், ஓய்வூதிய விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அறிமுகப்படுத்தப்படும்.
வங்கிகளில் கணக்கு ஆரம்பிப்பதைப் போல இங்கும் சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கலாம். தனியார் வங்கிகளும், இந்த தபால் நிலையங்களுடன் இணைந்து செயல்படும்.
இந்த சேவைக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் தேசிய அளவில் சிறந்த தபால் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்குப் பரிசும் வழங்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்...
தமிழகத்தில் இந்தத் திட்டம் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், துரைமங்கலம், பாடலூர், செட்டிகுளம், மதணகோபாலபுரம் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆண்டு இறுதிக்குள் 500 தபால் நிலையங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications