திமுக உள்கட்சி தேர்தல்: ஆள் கடத்தல் புகார்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பில் இருந்தும் ஆள் கடத்தல் புகார்கள் எழுந்துள்ளன. இரு தரப்பில் இருந்தும் புகார் வந்துள்ளதால் போலீஸார் குழம்பியுள்ளனர்.
திமுகவில் தற்போது உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் நகர செயலாளர் பதவிக்கு குன்றாண்டார்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் அன்புச்செல்வன் தனது ஆதரவாளர் ஒருவரை நிறுத்தியுள்ளார்.
அதே போன்று அரசு பொது வக்கீல் செல்லப்பாண்டியன் சார்பில் அஸ்ரப் அலி என்பவர் போட்டியிடுகிறார். இரு தரப்பினரும் ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி செல்லபாண்டியன் ஆதரவாளர்களான தவமணி, கருப்பையா ஆகியோரை அன்புச்செல்வன் கடத்தி சென்றுவிட்டதாக புகார் எழுந்தது. இதனால் அன்புச்செல்வனின் ஆதரவாளர்களான சேதுராமனை செல்லப்பாண்டியன் கடத்தி சென்றுவிட்டாதாக கூறப்படுகிறது.
இருதரப்பிலும் கடத்தல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தவமணியின் தந்தை கருப்பையா, சேதுராமனின் மனைவி இந்திரா ஆகியோர் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்துள்ளதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் தடுமாறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications