சிரஞ்சீவியுடன் கூட்டணியா?: பாஜக விளக்கம்
ஹைதரபாத்: சிரஞ்சீவியுடன் கூட்டணி ஏற்படுத்த பாஜக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வரும் 26ம் தேதி தனது கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார். இந்நிலையில் பாஜக தலைவர் அத்வானி, சிரஞ்சீவிக்கு போன் மூலம் வாழத்து தெரிவித்தார்.
மேலும் சிரஞ்சீவியின் கூட்டணி அமைக்கும் முயற்சிகளையும் அத்வானி துவக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதை நாயுடு மறுத்துள்ளார். ஹைதராபாத்தி்ல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மக்களிடையே பிரபலமாகி இருக்கும் சிரஞ்சீவி, தேசிய நலனில் அக்கறை கொண்டவர். அவரது அரசியல் பிரவேசத்திற்கு அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்பதற்காக அவர் பேசவில்லை.
தன்னுடைய, கட்சி, கொடி, கொள்கை குறித்து திருப்பதியில் நடக்கவுள்ள மாநாட்டில்தான் சிரஞ்சீவி அறிவிக்க உள்ளார். அதற்குள் அவரது கட்சி பற்றியோ, அவருடைய கட்சி கொள்கை பற்றியோ எதுவும் கூறிமுடியாது. இந்நிலையில் கூட்டணி குறித்து அத்வானி பேசுவது எப்படி சாத்தியம்?
காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. தேசிய நலனில் அக்கறை உள்ள அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தயார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications