ரூ.18 கோடி மோசடி: தொழிலதிபரை கைது செய்ய உத்தரவு
சென்னை: ரூ.18 கோடி மோசடி செய்த தொழிலதிபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிரயோகித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உதவி ஆணையர் ஒருவருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தொழிலதிபர் ஜுன்ஜுன்வாலா ரூ. 18 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இவரது மோசடி செயலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
கடந்த மார்ச் 17ம் தேதி மும்பையில் ஜூன்ஜூன்வாலா கைது செய்யப்பட்டார். பின்னர் மார்ச் 26ம் தேதி சைதாப்பேட்டை 11வது பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அன்றைய தினம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூன்ஜூன்வாலா 2 மனுக்களைத் தாக்கல்செய்தார். இதுவரையில் அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.
அவரைக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மூர்த்தி கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் விசாணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை 11வது பெருநகர மாஜிஸ்திரேட் பிறப்பித்த ஜாமினில் வெளிவர முடியாத கைது உத்தரவை நிறைவேற்ற சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக உதவி ஆணையர் ஒருவரை நியமித்து கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் நடவடிக்கையை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்ைகயை மேற்கொள்ள வேண்டியதாகியுள்ளது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications