தமிழக அரசு ஊழியர் ஊதிய உயர்வு-உயர் மட்டக் குழு அமைப்பு
சென்னை: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 6வது ஊதிய கமிஷனின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் மற்றும் பிற படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைக்க ஒரு உயர் மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான இந்தக் குழுவில் நிதித்துறை, பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர, நிதித்துறையின் இணைச் செயலாளரும் இந்தக் குழுவுக்கு உதவ உள்ளார்.
ஊதிய உயர்வு, படிகள் தவிர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் போன்றவற்றை மாற்றியமைப்பது தொடர்பாகவும் இக்குழு ஆராய்ந்து, பரிந்துரைகளைச் செய்யும்.
மூன்று மாதத்துக்குள் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். எனவே, அனைத்துத் துறை செயலாளர்களும் துறைத் தலைவர்களும் இந்தக் குழுவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் விரைவாக வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் பின்னர் 6வது சம்பள கமிஷனை எந்த அளவில் அமல்படுத்துவது என்பது குறித்து அரசு முடிவு செய்யும்.
அதற்கு முன் முக்கிய தொழிலாளர் சங்கங்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என்று தெரிகிறது.
பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் கருணாநிதி அறிவிக்கலாம் என கருதப்படுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications