பாகிஸ்தான்: ஜனாதிபதி பதவிக்கு சர்தாரி?

பாகிஸ்தான் அதிபராக இருந்து வந்த முஷாரப்பை கடும் நெருக்கடி கொடுத்து அப்பதவியிலிருந்து அனுப்பி விட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் கட்சி தலைமையிலான ஆளுங்கூட்டணி அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதில் தற்போது மும்முரமாகியுள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரியை அதிபர் பதவிக்கு தேர்வு செய்ய அக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த முடிவுக்கு கட்சியின் எம்.பிக்கள் ஒருமித்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான முடிவு நேற்று இரவு நடந்த எம்.பிக்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நேற்று தான், சர்தாரி அதிபராக முட்டாஹிதா குவாமி இயக்கம் ஆதரவு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு சர்தாரி அளித்த பேட்டியில், நான் அதிபர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆனால் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நான் கட்டுப்பட வேண்டும். யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக தேர்வு செய்ய கட்சிக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தார்.
நேற்று இரவு நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிபர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேசிய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேசமயம், அடுத்த அதிபராக பலுசிஸ்தான், வட மேற்கு எல்லைப்புற மாகாணம் போன்ற சிறிய மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. சர்தாரி அதிபராக அக்கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பதையே இது உணர்த்துவதாக உள்ளது.
-
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications