பி.இ கவுன்சிலிங்-25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தவறிய மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வருகிற 25ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. முன்னதாக 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு தற்போது தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்பில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங் 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. பிளஸ் டூ உடனடி தேர்வெழுதி, இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்ற மாணவர்களுக்கான இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் கடந்த 14ம் தேதி முதல் வழங்கப்பட்டன.
பிளஸ் டூ துணை தேர்வெழுதி, அதன் மூலம் இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்றவர்கள், இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்றிருந்து, விண்ணப்பிக்கத் தவறியவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உதரியராஜ் கூறியதாவது: பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு இதுவரை 867 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை 2008ம் ஆண்டுக்கான துணை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி வருகிற 25ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறும். பிளஸ் டூ துணை தேர்வெழுதி, இன்ஜினியரிங் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுடன், ஏற்கனவே தகுதி பெற்றிருந்த விண்ணப்பிக்கத் தவறியவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.
கவுன்சிலிங்கில், கடந்த நான்கு நாட்களாக சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 பேர் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். நேற்றைய கவுன்சிலிங்கில் ஆயிரத்து 364 பேர் உட்பட, இதுவரை 68 ஆயிரத்து 80 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய கவுன்சிலிங் முடிவில், 13,841 இடங்கள் காலியாக இருந்தன. இன்னும் ஐந்து நாட்கள் நடக்கவுள்ள கவுன்சிலிங்கில், 8,000 இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவில், காலியாக இருக்கும் இடங்களுக்கு இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் நடைபெறும்.
எனவே, இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் எதிர்பார்க்கப்பட்டதை விட, மிகக்குறைவான இடங்களே காலியாக இருக்கும் என தெரிகிறது.
எம்பிஏ கவுன்சிலிங்...
தமிழகம் முழுவதும் பல்வேறு சுயநிதி கலை அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் 7,779 எம்.பி.ஏ., இடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்ப, கோவை தடாகம் ரோட்டில் உள்ள ஜிசிடி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு கட்டமாக பொது கவுன்சிலிங் நடத்தப்பட்டன. முடிவில் 6,844 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 935 இடங்கள் காலியாகவுள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கவுன்சிலிங், ஜிசிடி கல்லூரியில் வரும் 24ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் (டான்செட்) மைனஸ் மதிப்பெண் பெற்ற 235க்கும் அதிகமான மாணவ, மாணவியருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வெழுத விண்ணப்பித்த அனைவருக்கும் எம்.பி.ஏ., கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலிங் முடிந்து மீதியுள்ள சீட்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகத்தின் வசம் சென்றடையும். பின் இந்த இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications