பி.இ.: ஏழை மாணவிக்கு கருணாநிதி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை: என்ஜினியரிங் கல்லூரியில் படிக்க ஏழை மாணவிக்கு ரூ.25,000 வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவி யுவஸ்ரீ. பிளஸ் டூ தேர்வில் 1,018 மதிப்பெண் பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி கேட்டு முதல்வருக்கு விண்ணப்பித்தார்.
இதையடுத்து, யுவஸ்ரீக்கு உடனடியாக ரூ.25,000 வழங்கும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்
யுவஸ்ரீயை நேரில் சந்தித்து உடனே பணத்தை வழங்கும்படி முதல்வர் கூறியுள்ளார். இந்த நிதி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications