சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான்: முதல் பரிசு ரூ.10 லட்சம்
சென்னை: சென்னையில் வருகிற 31ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 10 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.
தமிழ் மையம், குட்வில் கம்யூனிகேஷன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கிவ் லைப் சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம் சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 21.09 கி.மீ. தொலைவு கொண்ட இப் போட்டியில் இருபாலரும் பங்கேற்கலாம்.
முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், 2-வது பரிசாக ரூ. 5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 2 லட்சமும், 4-வது பரிசாக ரூ. 1 லட்சமும், 5-வது பரிசாக ரூ. 50 ஆயிரமும், 6-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும், 7-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும், 8-வது பரிசாக ரூ. 10 ஆயிரமும், 9-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும், 10-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 11 முதல் 20-வது இடம் வரை பெறுவோருக்கு ரூ. ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இருபாலருக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். முதல் 20 இடங்களைப் பெறும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாரத்தான் ஓட்டத்தில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ. 50. பள்ளி மாணவர்களுக்கு இலவசம். நிரப்பப்பட்ட படிவங்களை குட்வில் கம்யூனிகேஷன்ஸ், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications