தீவைத்து மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: வரதட்சனை கேட்டு மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவனுக்கு கீழ் கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

திருச்சி லால்குடியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி மலர்விழி. திருமணத்தின்போது மலர்விழிக்கு அவரது பெற்றோர்கள் 10 பவுன் நகைகள் மற்றும் சீர் வரிசைகளை செய்துள்ளனர். மேலும், நகைகள், பணம் வாங்கிவரும்படி மலர்விழியை கொடுமை செய்துள்ளார் அன்பழகன்.

அதற்கு மறுத்த வந்த மலர்விழியை அன்பழகன் கொடுமைபடுத்தினார். இந்நிலையில் கடந்த 4.8.2006 அன்று மலர்விழியை தீ வைத்து கொளுத்தினார் அன்பழகன். இதில் மலர்விழி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மகளிர் நீதிமன்றம் அன்பழகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அன்பழகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முருகேசன், சத்திய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+