'நக்ஸல்கள்'-துப்பாக்கி கோரும் வனத்துறை ஊழியர்கள்
மதுரை: தமிழக காட்டிற்குள் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டாதால் ரோந்துப் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு துப்பாக்கி மற்றும் ஜீப் வழங்க வேண்டும் என்று மாநில வன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின் வருமாறு:
வனத்துறை ஊழியர்களுக்கு காவல் துறையினருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். காவல் துறையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் மொத்த நிலப்பரப்பில் 17.5 சதவீதம் உள்ள வனப்பகுதியை காக்க வெறும் 6,000 ஊழியர்களே உள்ளனர். இதனால் வனக்குற்றங்களை தடுக்க முடியாத நிலை உள்ளது.
அடர்த்தியான கொடைக்கானல், ஊட்டி, தர்மபுரி, கன்னியாகுமரி, மற்றும் தேனி போன்ற மாவட்ட வனப் பகுதியில் தற்போது நக்சல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது வன சரகர்களான ரேஞ்சருக்கு மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அதிகாரம் உள்ளது.
காட்டிற்குள் ரோந்து பணியல் ஈடுபடும் மற்ற வனத்துறை ஊழியர்களான வனவர்கள், வன காப்பாளர்கள், வனக் காவலர்கள் ஆகியோருக்கும் அரசு உடனே துப்பாக்கி வழங்க வேண்டும்.
ரேஞ்சருக்கு ஜீப் கொடுத்துள்ளதைப் போன்று மற்ற அதிகாரிகளுக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும். காவல் துறை பணியில் எஸ்.ஐ. பணியிடங்களை நேரடியாக நியமிப்பது போல வனத்துறையிலும் வனவர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க வேண்டும்.
வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர்களுக்கு தோட்ட காவலர்கள் உள்பட அனைத்து நிலை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மதுரை, தேனி, கொடைக்கானல், இராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய வனத்துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications