மறைமுகமாக பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்த முயற்சி: ஜெ

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மீண்டும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக விவசாய உற்பத்தி, தொழில் வளம் என அனைத்து வளங்களும் குன்றிப் போயுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான பயனும் இல்லை.
எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமைச் செயலாளர் டீசல் தட்டுப்பாட்டிற்குக் காரணம் மின் பற்றாக்குறையே என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மின்சார பற்றாக்குறை காரணமாக தகவல் தொழில்நுட்பம் உள்பட அனைத்து துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் 24 மணி நேரமும் இயங்க டீசல் தேவைப்படுகிறது என்றும், இதன் விளைவாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தொழில் நிறுவனங்கள் வழக்கத்திற்கு அதிகமாக டீசலை உபயோகித்து வருவதால் வழக்கமான டீசல் ஒதுக்கீட்டை அவர்களுக்கு அளித்து விட்டு, அதற்கு மேல் தேவைப்படும் டீசலுக்கு சந்தை விலையை நிர்ணயிக்கும் முயற்சியில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சாதாரண டீசலுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கினால், பிரீமியம் டீசலை அதிகம் விற்கலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புகார் கூறுகின்றனர்.
கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 35 டாலர் அளவுக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இது போன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது போன்ற முயற்சிகளில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டால், அது விலைவாசி மேலும் உயர வழிவகுக்கும். இதன் விளைவாக பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள்தான்.
பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி மக்களுக்குக் கிடைக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மறைமுகமாக உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றும், முதல்வர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications