மீண்டும் திமுக கூட்டணி: தேர்தல் நேரத்தில் முடிவு-ராமதாஸ்

பாமகவை, கூட்டணியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு திமுக அதிரடியாக வெளியேற்றியது. இருப்பினும் பாமக கலங்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், அதிமுக பக்கம் பாமக போகலாம் என்ற பேச்சு எழத் தொடங்கியது. மேலும், இடதுசாரிகள் அமைக்கப் போகும் 3வது அணியில் பாமகவும், தேமுதிகவும் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு நேற்று பலமாக எழுந்தது.
இந்தச் சூழ்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பாமகவும் இடம் பெற்றால் லோக்சபா தேர்தலில் கூட்டணி வலுவடையும் என்று தெரிவித்திருந்தார். மீண்டும் கூட்டணிக்கு வர பாமகவுக்கு கருணாநிதி விடுத்த அழைப்பாகவே இது கருதப்பட்டது.
நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், பாமக கூட்டணிக்கு மீண்டும் வரும் என்று தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசப் போவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் அழைப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக இடம் பெற்றிருந்த அணிக்கே வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் பாமக எந்த அணியில் இடம் பெற்றிருக்கிறதோ அந்த அணிக்கே தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை இது உறுதிப்படுத்தியது.
லோக்சபாவுக்கு தேர்தல் வரும் வரை பாமக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். ஆளுங்கட்சி செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டுவோம். குறைகளை விமர்சிப்போம். தக்க அறிவுரைகளை வழங்குவோம்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் வரை கூட்டணி குறித்து முடிவெடுக்க இயலாது. தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து கட்சி முடிவெடுக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் திமுகவின் அழைப்பு தொடர்பாக அவசரம் காட்ட ராமதாஸ் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதேசமயம், முதல்வரின் அழைப்பை அவர் நிராகரிக்கவும் இல்லை என்பதால் திமுக கூட்டணியில் மீண்டும் பாமக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக கருதப்படுகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications