உட்கட்சி தேர்தல்: அழகிரி- ஸ்டாலின் ஆதரவாளர்கள் மோதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக உட்கட்சி தேர்தலில் மு.க. அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடும் மோதலுக்கிடையே கீரனூர் பேரூராட்சி செயலாளராக ஸ்டாலின் ஆதரவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளுக்கான கிளைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயலாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதி தேர்தல் நடைபெறுவதாக திமுக தலைமை அறிவித்தது. அரிமழம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கீரனூர் பேரூராட்சியில் அமைச்சர் ஸ்டாலின் ஆதரவாளராக அரசு வக்கீல் செல்லப் பாண்டியனும், மு.க. அழகிரி ஆதரவாளராக வேளாண்மை விற்பனை குழு தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான அன்பு செல்வன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த இரு கோஷ்டிகளும் தங்களது ஆதரவாளர்களை எதிர்தரப்பு கடத்திவிட்டதாக ஒருவர் மீது ஒருவர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் செல்லப்பாண்டியன், அன்பு செல்வன் ஆகியோரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கீரனூர் பகுதி பேரூராட்சி தேர்தல், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறுவதாக திமுக தலைமை அறிவித்தது. தேர்தல் தொடங்குதற்கு முன்பே ஸ்டாலின்-அழகிரி ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனால் மாவட்ட திமுக அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய 80 பேரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 85 பேரில் 5 பேர் வாக்களிக்க வரவில்லை. அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி புகார் கூறி தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார் அன்புச்செல்வன். இதனால் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு பதிவு மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் ஸ்டாலின் ஆதரவாளர் அஸ்ரப் அலி 57 வாக்குகள் பெற்று பேரூராட்சி செயலாளராக வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்











Click it and Unblock the Notifications