ஜனாதிபதி பதவி-சர்தாரிக்கு ஆதரவளிக்க நவாஸ் நிபந்தனை
லாகூர்: ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சர்தாரிக்கு ஆதரவளிக்க தயார் என்று கூறியுள்ளார் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த முஷாரப் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த பதவிக்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் ஆளும் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் சர்தாரி போட்டியிடுகிறார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பாக ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் கூட்டணியில் இருந்து விலகி கொள்ளப்போவதாக முஸ்லீம் லீக் கட்சி மிரட்டியுள்ளது.
இந்நிலையில், சர்தாரிக்கு ஆதரவு தருவதாகவும், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. அதில், ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் நிபந்தனை விதித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீக்கவும் ஜனாதிபதிக்கு தற்போது உள்ள அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நிபந்தனை. அதோடு பதவி நீக்கப்பட்ட நீதிபதிகள் அனைவரும் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைக்கு இன்று சாதகமான பதிலை தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் தான் ஆதரவு தருவோம் என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications