ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: 8 பேர் கைது
ஜெய்ப்பூர்: கடந்த மே மாதம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஒருவரையும் சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 13ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 7 பேரை கோடா என்ற பகுதியில் கடந்த வாரம் போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள், இம்ரான் (எ) ரஸா, நாஜாகட், மெஹந்தி ஹஸன், அமானுல்லா (எ) அமான், டாக்டர் யூனூஸ், தவ்பீக் மற்றும் டாக்டர் இஷாக் ஆகியோர்.
விசாரணையில் இவர்கள் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்களை அடுத்த மாதம் 7ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவர்கள் மீது, தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது, மக்களை தூண்டிவிட்டது, சமூகத்துக்கு ஊறு விளைவித்தது ஆகிய குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஷானாஸ் ஹூசைன் என்பவரை ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச போலீஸார் லக்னோவில் நேற்று கைது செய்தனர்.
குண்டுகளை வைத்தது, தாக்குதலுக்கு தயார் செய்தது போன்றவற்றை ஷானாஸ் ஹூசைன்தான் செய்ததாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூர் வெடிகுண்டு தாக்குதலில் மாஸ்டர்மைண்டாக ஸாஜித் மன்சூரி என்பவர் செயல்பட்டதாக விசாரணையில் ஷானாஸ் கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications