ஒரிஸ்ஸாவில் விஎச்பி வன்முறை: 2 பேர் கொலை-சர்ச்சுகள் எரிப்பு
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸாவில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். பல சர்ச்சுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு பாதிரியார் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் நிரம்பிய காந்தமால் மாவட்டத்தில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள், பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஎச்பியினர் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
காந்தமால் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், நகரங்களிலும் 100-க் கும் மேற்பட்ட தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கிறிஸ்தவ பாதிரியார்கள், கன்னி யாஸ்திரிகளை தாக்கி, வனப் பகுதிக்கு விரட்டினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவரான வி.எச்.பி பிராந்திய தலைவர் சுவாமி லட்சுமணானந்தா சரஸ்வதி (வயது 85)யின் புர்பானி அலுவலகத்தில் ஞாயிறன்று இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், லட்சுமணானந்தாவையும், அவ ருடன் இருந்த மேலும் 4 பேரையும் சுட்டுக் கொலை செய்தனர்.
இதையடுத்து வி.எச்.பி. தொண்டர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
ஞாயிறன்று நள்ளிரவு துவங்கிய இந்த வன்முறை திங்கட்கிழமை முழுவதும் தொடர்ந்தது. காந்தமால் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒரிசா முழுவதும் விஎச்பி - பாஜக குண்டர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் புகுந்து அடித்து நொறுக்கினர். ஏராளமான தேவா லயங்கள் தீக்கிரையாக்கப் பட்டன.
காந்தமால் மாவட்டத்தில் பலிகுடா, பர்காமா, திஹாபலி, உதயகிரி உள் ளிட்ட பகுதிகளில் கிராமப்புற தேவாலயங்கள், வழி பாட்டுக் கூடங்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. தலைநகர் புவனேஸ்வரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்த போதிலும், அதையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட வி.எச்.பி. தொண்டர்கள் ஆயுதங்களுடனும், கொலைவெறியுடனும் அப்பாவி கிறிஸ்தவ மக் களை தேடித் தேடி தாக் கினர்.
காந்தமால் மாவட்டத் தில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஒரு பாதிரியார் பலத்த காயமடைந்தார். 20 குழந்தைகள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
இதேபோல ரூபா என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் ராசானந்த பிரதான் என்பவர் உயிரோடு கருகினார்.
தொடர்ந்து ஒரிஸ்ஸா முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications