திமுகவுடன் இனி கூட்டணி சேர மாட்டோம்: தா.பாண்டியன்

ஓசூரில் கடந்த நான்கு நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதன் நிறைவில் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசுகையில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடியாது என்பது அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவு.
அந்த முடிவின்படி திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது. காங்கிரஸுடன் உறவு வைத்திருக்கும் வரை இனி திமுகவுடன் உறவு கிடையாது.
இதை கொள்கை முடிவாகவே பிரகடனம் செய்கிறோம். இது எங்களது முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இடதுசாரிகளின் கூட்டான முடிவு. இதை திருத்துவது, மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எந்தவித எதிர்ப்பு வந்தாலும் அந்த விவகாரத்தில் அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கும் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications