கூட்டணியிலிருந்து நவாஸ் விலகல்-அரசு தள்ளாட்டம்
இஸ்லாமாபாத்: சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப் வாபஸ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் சர்தாரி போட்டியிடுவதை எதிர்த்தே நவாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தன.
சர்தாரியின் பாகிஸ்தான் கட்சி தலைமையில் அரசு அமைந்தது. அந்தக் கட்சியைச் சேர்ந்த கிலானி பிரதமரானார்.
இதையடுத்து முஷாரப் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றி பதவியைப் பறிக்குமாறு நவாஸ் கோரினார். ஆனால், இதை தள்ளிப்போட்டு வந்தார் சர்தாரி. இதையடுத்து அரசுக்கு ஆதரவு வாபஸ் என நவாஸ் மிரட்டவே முஷாரப் மீது கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்தார் சர்தாரி.
இதையடுத்து நவாசின் பரம எதிரியான முஷாரப் பதவி விலகினார்.
இந் நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதிபர் பதவிக்கு எந்தக் கட்சியையும் சாராத ஒரு பொது நபரை நிறுத்தலாம் என நவாஸ் கூறிக் கொண்டிருந்தபோதே, அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சர்தாரி அறிவித்தார்.
இதனால் கடுப்பானார் நவாஸ். இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், பிரதமரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆகியவற்றை அதிபரிடம் இருந்து பறிக்கும் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் நவாஸ் கூறினார். ஆனால், இதை சர்தாரி ஏற்கவில்லை.
இதையடுத்து தனது கட்சியின் மூத்த தலைவர்கள், எம்பிக்களுடன் ஆலோசனை நடத்திய பின் நவாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் செயல்படுத்தவில்லை. வேறு வழியின்றி இந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். இனி எதிர்கட்சியாக இருந்து செயல்படுவோம். நாட்டில் ஜனநாயகம் தழைக்க பாடுபடுவோம்.
எங்கள் கட்சி சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி சயீத் உஸ்மான் சித்திக் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார். அவர் முஷாரப்பின் ராணுவ நடவடிக்கைகளை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்தவர் அவர் என்றார் நவாஸ்.
நவாஸ் ஷெரீப்பின் இந்த அறிவிப்பால், சர்தாரியின் கட்சியைச் சேர்ந்த பிரதமர் கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க சர்தாரி முயற்சி மேற்கொண்டுள்ளார்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications