பழனியில் கூடுதல் பார்கிங் கட்டணம்-கோர்ட் தடை
மதுரை: பழனியில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பழனி மனித உரிமைகள் கழக அமைப்பாளர் செந்தில்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது.
பழனி அருள்மிகு தண்டாயுபாணி கோவில் புகழ்பெற்ற தலமாகும். சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
பழனியாண்டவர் பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி, ஜவஹர் ரோடு, ஈத்தாரி ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் காருக்கு ரூ.20, வேனுக்கு ரூ.25, லாரிக்கு ரூ.40, பஸ்ஸூக்கு ரூ.50 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது நகராட்சி விதி.
ஆனால் குத்தகைதாரர் சத்தியா அனைத்து வாகனதிற்கும் ரூ.60 வசூல் செய்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எலிப் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், பழனியில் பார்க்கிங் செய்யப்பட்டும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்தனர்.
மேலும், அந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், பழனி நகராட்சி ஆணையர், குத்தகைதாரர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications