இந்தியாவின் 7 அதிசயங்கள்-என்டிடிவி புதிய நிகழ்ச்சி!
டெல்லி: என்.டி.டி.வி செய்திச் சேனல், மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து "இந்தியாவின் 7 அதிசயங்கள்" எவை என கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகச் சிறந்த சின்னங்கள் மற்றும் வரலாற்றுப் பொக்கிஷங்களை இன்றைய தலைமுறை வாயிலாக உலகுக்கு உணர்த்துவதற்காகவே இந்த திட்டம் என அறிவித்துள்ளது என்டிடிவி.
இந்தியாவின் இயற்கை மற்றும் செயற்கையான 7 அதிசயங்கள் எவை என்பதை வாசகர்களும் பார்வையாளர்களும் தார்மானித்து வரிசைப்படுத்தி அனுப்பி வைக்கலாம். பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற்ற சின்னங்கள் இந்தியாவின் 7 அதிசயங்களாகப் பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்து என்.டி.டி.வி சேர்மன் ப்ரணாய் ராய் கூறுகையில், இத்திட்டத்தின் நோக்கமே உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நம் நாட்டின் விலை மதிப்பற்ற கலாச்சாரத்தைப் பறைசாற்றுவதுதான். அதே நேரம் இந்தியாவின் ஏழு அதிசயங்களை நாம் சொல்லித் தெரிந்து கொள்வதைவிட, அதை நாட்டு மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தீர்மானிப்பதுதான் சிறந்தது. அதற்காகத்தான் இப்படி ஒரு தேர்வு முறை.
நாட்டின் மூலை முடுக்கில் உள்ள புதிய இடங்களைப் பற்றிய தகவல்களும் இதன மூலம் கண்டறியப்படும். நமது 5,000 ஆண்டு பழமையான கலாச்சாரத்தின் சின்னங்கள் எங்கிருந்தாலும் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம். உலகெங்கும் சென்று அடைய வகை செய்யலாம்..." என்றார் பிரணாய் ராய்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications