சென்னையில் காதலர் கட்சி நடத்திய திருமணம்!
சென்னை: அகில இந்திய காதலர் கட்சி. நிஜமாகவே இப்படி ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் சென்னை கோடம்பாக்கம் பூபதி நகரை சேர்ந்தவர் குமார்ஸ்ரீஸ்ரீ. கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று அகில இந்திய காதலர் கட்சியை தொடங்கினார்.
காதல் ஜோடிகளுக்கு வரும் எதிர்ப்பை சமாளித்து பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் நடத்தி வைப்பதே இந்த காதலர் கட்சியின் கொள்கை(!!). இந்த காதலர் கட்சி நடத்தி வைத்த முதல் திருமணம் நேற்று வட பழனியில் நடந்தது.
சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் ஜார்ஜ் என்பவரின் மகன் சீனிவாசன் (22). தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். உடன் வேலை செய்யும் காமராஜ் காலனியை சேர்ந்த நாகமுத்துவின் மகள் லட்சுமியை (20) 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
காதலுக்கு சீனிவாசனின் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் பெற்றோர் லட்சுமி வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர்.
அதற்கு லட்சுமியின் தந்தை நாகமுத்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து அகில இந்திய காதலர் கட்சி தலைவர் குமார்ஸ்ரீஸ்ரீயின் உதவியை நாடினார். சீனிவாசனின் பெற்றோரும் குமார்ஸ்ரீஸ்ரீயை சந்தித்து பேசினர்.
இதையடுத்து குமார்ஸ்ரீஸ்ரீ, நாகமுத்துவிடம் பல நாட்கள் பேசி அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார். இதையடுத்து வட பழனி கோவில் குளம் அருகில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சீனிவாசன்-லட்சுமி திருமணம் நடந்தது.
குமார்ஸ்ரீஸ்ரீ, அவரது மனைவி மங்கா தேவி ஆகியோர் தாலியை எடுத்துத் தந்து மணமக்களை வாழ்த்தினர்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications