பயங்கர ஆயுதங்களுடன் பாமக பஞ். தலைவர் கைது
வேதாரண்யம்: பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாமக பஞ்சாயத்து தலைவரை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்டத்தில் கூலிப்படை கும்பல் அதிகரித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டிணம் பஸ் நிலையம் அருகில் நீடுர் விஜி என்பவரை போலீசார் சமீபத்தில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் வேதாரண்யம் அருகே உள்ள தென்னம்புலம் கிராம பாமக பஞ்சாயத்து தலைவர் ராஜசிம்மன் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களும், உரிமம் பெறாத துப்பாகிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜசிம்மனையும், அவரது கூட்டாளி முக்கூட்டு முருகன் என்பவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ராஜசிம்மன், வேதாரண்யம் அதிமுக பிரமுகர் தியாகராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்படதக்கது.












Click it and Unblock the Notifications