ஓபாமா முறைப்படி வேட்பாளராக அறிவிப்பு
டென்வர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஓபாமா, முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய நடந்த மாகாண வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா முன்னிலை பெற்று வேட்பாளரானார். அவருடன் கடைசி வரை மோதிப் பார்த்த ஹில்லாரி கிளிண்டன், இனியும்தனக்கு வெற்றி வாய்ப்பில்லை என்ற நிலை வந்ததைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் டென்வர் நகரில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடந்தது. அதில்முறைப்படி ஓபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பான தீர்மானத்தை ஹில்லாரி கிளிண்டன் கொண்டு வந்தார். அதை ஜனநாயகக் கட்சியின் மாநாடு குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து ஆயிரக்கணக்கான கட்சிப் பிரதிநிதிகள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இதன் மூலம் ஜனநாயகக் கட்சி புதிய வரலாறு படைத்துள்ளது. கருப்பர் இனத்தைச் ேசர்ந்த ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்துவது இதுவே முதல் முறை. ஓபாமா வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் கருப்பர் இன அதிபர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
கென்யாவைச் ேசர்ந்த தந்தைக்கும், அமெரிக்காவைச் ேசர்ந்த தாய்க்கும் பிறந்தவர் ஓபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கருப்பர் இனத்தவர்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை கூட கிடையாது. தற்போது அதிபர் பதவிக்கு வெகு அருகே கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஓபாமா வந்திருப்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நவம்பர் 4ம் ேததி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெய்ன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு ஜோசப் பிடன் போட்டியிடுகிறார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications