டெல்லி-சென்னை எக்ஸ்பிரசுக்கு குண்டு மிரட்டல்
நாக்பூர்: டெல்லி - சென்னை இடையிலான கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனால் நாக்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னைக்கு நேற்று ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நாக்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனது பெயரை மோகன்லால் என்று கூறிக் கொண்டார். பின்னர் திருப்பதிக்குச் செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து மேல் விவரங்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று கூறி போனை வைத்து விட்டார்.
ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் அப்போது வந்து கொண்டிருந்தது. இது திருப்பதி வழியாக செல்லக் கூடியது. இதையடுத்து ஜிடி எக்ஸ்பிரஸை நிறுத்திய ரயில்வே போலீஸார் ரயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ஜிடி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.
நாக்பூர் வழியாக தென் மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் ரயில்வே போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications