புலிகளுக்கு விசைப்படகு-இருவர் கைது
நெல்லை: விடுதலை புலிகளுக்காக விசை படகுகளை கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் என்ற இடத்தில் நேற்று காலை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விசைப் படகுகளை திருடிக் கொண்டு இருவர் கடலுக்குச் சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் போலீஸூக்கும், கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலோர காவல் படையினர் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொல்லம் அருகே கடலில் அந்த இரண்டு படகுகளும் செல்வதை பார்த்தனர். அவர்களை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் படகுகளோடு அவர்களையும் கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள், கன்னியாகுமரியை சேர்ந்தவர் தங்கராஜ். குளச்சலை சேர்ந்தவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது.
விசைப்படகுகளை விடுதலை புலிகளுக்காக கடத்தி சென்றதாக இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications