பீகாரில் பரிதாபம்: மீட்பு படகு கவிழ்ந்து 20 பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டு புறப்பட்ட மீட்பு படகு கவிழ்ந்ததில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நேபாளத்தில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து பீகார் மாநிலத்துக்கு வரும் கோசி ஆற்றில் கடந்த 2 வாரங்களாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோசி ஆற்றில் விநாடிக்கு 1.91 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடும் வெள்ளத்தால் ஆற்றின் வழக்கமான பாதை மாறிவிட்டது. மேலும் பல இடங்களில் உடைப்பும் ஏற்பட்டதால் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதில் 55 பேர் பலியாயினர்.
இந்த நிலையில் மாதேபுரா மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மீர்கஞ்ச் என்ற இடத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று மாலை அதிவேகமாக நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட 60 பேரை மீட்புக்குழுவினர் படகில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். கோசி ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அந்த படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த மீட்பு குழுவினர் உள்பட அனைவரும் ஆற்றில் விழுந்தனர். தகவலறிந்த ராணுவ மீட்புக்குழுவினரும், தேசிய பேரழிவு மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்கும் பணியில் வேகமாக ஈடுபட்டனர். எனினும் இதில் 20 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 8 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததாலும், இருட்டி விட்டதாலும் மீட்பு பணிகள பாதிக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் ஒருவர் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications