சங் பரிவார் அட்டூழியம்: ஒரிஸ்ஸா அரசை கலைக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிருஸ்தவர்களை சங் பரிவார் தீவிரவாதிகள் தாக்கி வருவதை தடுக்காத அந்த மாநில அரசு உடனே கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிருஸ்தவர்களையும், அவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களையும், தேவாலயங்களையும் சங் பரிவார் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மதசார்பற்ற இந்தியாவில் எந்த அளவுக்கு மதவெறி தலைதூக்கி விரித்தாடுகிறது என்பதற்கும், குறுகிய மதவெறி உணர்வுகள் தடுக்கப்படாவிட்டால், நிலைமை எந்த அளவுக்கு கட்டுக்கு அடங்காமல் போகும் என்பதற்கும் ஒரிஸ்ஸாவில் நடந்துள்ள வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் மிக மோசமான எடுத்துக் காட்டாகும்.
ஒரு அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அந்த அமைப்பினர் ஆத்திரம் அடைவதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் படுகொலைக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சிறுபான்மை மக்களை பழிவாங்கும் நோக்கில் வன்முறையில் ஈடுபடுவதை நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
பலநாட்களாக நடந்து வரும் வன்முறையை ஒடுக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பாஜக பங்கேற்றுள்ள ஒரிஸ்ஸா மாநில அரசு தவறி விட்டது. மக்களை காக்க தவறிய ஒரு மாநில அரசு தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு எந்தவகையிலும் நியாயம் இல்லை.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி அந்த அரசைக் கலைப்பதற்கு தகுந்த அடிப்படை உள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
வகுப்பு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரிஸ்ஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் குறுகிய மத உணர்வுகளையும் அதன் விளைவாக தலைதூக்கும் வன்முறை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்திட மத்திய அரசும், எல்லா மாநில அரசுகளும், காவல்துறையும், சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பவர்களும் முன்வர வேண்டும். இதன் மூலம் மதசார்பற்ற இந்தியாவை கட்டிக்காக்க உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications