ரூ.6,000 லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது
திருத்தணி:சிறை பிடிக்கப்பட்ட டிராக்டரை ஒப்படைக்க ரூ.6,000 லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.
திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் திருநாவுக்கரசு. கடந்த 14ம் தேதி ராமாபுரம் அருகே குசஸ்தலை ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளியதாக அரக்கோணத்தைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றை எஸ்ஐ திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த டிராக்டரை திருப்பித் தரும்படி திருநாவுக்கரசிடம் பாபு கேட்டார். அதற்கு ரூ.6,000 லஞ்சம் கொடுத்தால், டிராக்டரை தருவதாக திருநாவுக்கரசு கூறியதாக தெரிகிறது.
இதற்கு ஒப்புக்கொண்ட பாபு முதல் கட்டமாக ரூ.1,300 கொடுத்துள்ளார். இதன் பின்னர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பாபு இதுகுறித்து புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பாபுவுடன் கனகம்மா சத்திரத்துக்கு விரைந்தனர். அங்கு தனியார் ஹோட்டலில் எஸ்ஐ திருநாவுக்கரசரிடம் கொடுக்கும்படி ரூ.5,000த்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாபுவிடம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, திருநாவுக்கரசை சந்தித்த பாபு அந்த பணத்தை அவரிடம் கொடுத்தார். பணத்தை திருநாவுக்கரசு வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தனர். கணக்கில் வராத ரூ.15,000 பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications