குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் பாரக் ஓபாமா, துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக ஜோசப் பிடனை சமீபத்தில் அறிவித்தார். இந்தநிலையில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆளுநர் பாபி ஜிண்டால் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அதிகம் அறியப்படாதவரான, அலாஸ்கா மாகாண ஆளுநரான சாரா பாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1984ம் ஆண்டு நடந்த மிஸ் அலாஸ்கா போட்டியில் 2வது இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் ஜான் மெக்கெய்ன் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. காரணம், துணை அதிபர் வேட்பாளராக ஹில்லாரியை ஓபாமா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிடனை தேர்வு செய்தார். இதனால் பெண் வேட்பாளர்களிடையே அதிருப்தி நிலவியது. இதை பயன்படுத்திக் கொண்டு வாக்குகளைப் பெறும் நோக்கில்தான் சாராவை மெக்கெய்ன் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஹில்லாரி ஆதரவாளர்களை தம் பக்கம் ஈர்க்க முடியும் என்பதே மெக்கெய்னின் கணக்கு.
நேற்று ஓஹியோவின் டேய்டன் நகரில் நடந்த தனது 72வது பிறந்த நாள் விழாவின்போது சாராவின் பெயரை மெக்கெய்ன் அறிவித்தார்.
44 வயதாகும் சாரா பாலின், 1984ம் ஆண்டு நடந்த மிஸ் அலாஸ்கா போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தவர். இப்போது அலாஸ்கா மாகாண ஆளுநராக இருக்கிறார். தேசிய அளவில் அதிகம் அறியப்படாதவர்.
5 குழந்தைகளுக்குத் தாயான சாரா பலின், கன்சர்வேட்டிவ் ஆவார். எந்தவித குற்றம் குறையும் இவர் மீது இதுவரை இல்லை. கிளீன் இமேஜ் கொண்டவர். ஊழல்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்பவர்.
ஆளுநராவதற்கு முன்பு ஹாக்கி வீராங்கனையாகவும் இருந்துள்ளார் சாரா. மேலும், வசில்லா நகர மேயராகவும் பதவி வகித்தார். இதழியல் துறையில் பட்டம் பெற்றவரும் கூட.
சாராவின் நியமனத்தை ஜனநாயகக் கட்சியினர் முதல் பல தரப்பினரும் பாராட்டியுள்ளதால் ஓபாமா தரப்பு சற்றே கவலையுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications