எங்களைத் தாக்கினால் உலகப் போர் மூளும்: ஈரான்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஈரான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அது உலகப் போராக மாறும் என்று ஈரான் ராணுவ துணைத் தளபதி சயீத் மசூத் ஜஸாயரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டெஹ்ரானில் அவர் கூறுகையில், அமெரிக்க நிர்வாகத்தின் அராஜகமும், ஜியோனிசத்தின் ஆதிக்க மனப்பான்மையும் சூடான், ஈராக், ஆப்கானிஸ்தான் என பரவி இப்போது ஈரானைக் குறி வைத்து நிற்கின்றன. இதன் மூலம் உலகம் பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகநாடுகள் அணி திரளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஈரானை யாராவது தொட்டால் அது உலக போராக மூளும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.
அது மாதிரியான போரின்போது ஏகாதிபத்திய அரசுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார் ஜஸாயரி.












Click it and Unblock the Notifications