சிரஞ்சீவியை சமாளிக்க நடிகர்கள்- நாயுடு யுக்தி
ஹைதராபாத்: ஆந்திர அரசியலில் சிரஞ்சீவியை சமாளிக்க தனது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தனக்கு ஆதராவாக உள்ள தெலுங்கு திரையுலகினரை களமிறக்க தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
சிரஞ்சீவி தொடங்கியுள்ள பிரஜா ராஜ்ஜியம் மற்ற கட்சிகளை மிரள வைத்துள்ளது. இந்தக் கட்சித் தொடக்க விழாவுக்குத் திரண்ட கூட்டம் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளையும் மிரட்டிவிட்டது.
இந்த நிலையில், என்.டி.ஆர். தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, சிரஞ்சீவிக்கு ஏற்பட்டு வரும் செல்வாக்கை சமாளிக்கும் யுக்தியாக திரையுலகம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
இதுவரை திரையுலகின் பெரும் ஆதரவு தெலுங்கு தேசத்திற்கு மட்டுமே கிடைத்து வந்தது. தற்போது அதை பங்கு போட சிரஞ்சீவி வந்துவிட்டார். இதனால் பெரும் பீதியில் உள்ளது தெலுங்கு தேசம். எனவே சினிமா நட்ச்சத்திரங்களையும், ரசிகர்களையும் தக்க வைக்க சந்திர பாபு நாயுடு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார்.
என்.டி. ராமராவ் குடும்பத்தில் தற்போது பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி. ஆர். அரிகிருஷ்ணா ஆகிய முன்னணி நடிகர்கள் உள்ளனர். அதே போல நடிகர் கல்யாணராமும் தெலுங்கு தேசம் கட்சியில் உள்ளார்.
இவர்களை சிரஞ்சீவிக்கு எதிராக களம் இறக்க சந்திர பாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பாலகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார் நாயுடு.
தெலுங்கு தேசத்தில் உள்ள சினிமா உலக பிரமுகர்கள் அஸ்வின் தத், ராகவேந்திர ராவ், நடிகர் முரளிமோகன் ஆகியோரையும் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர்., ஹரி கிருஷ்ணா ஆகியோரை இப்போதே களம் இறக்கி ஆதரவு திரட்டுவது, 3 பேருக்கும் ஒவ்வொரு பகுதியை பிரித்து கொடுத்து தேர்தல் பணிகளை செய்ய வைப்பது என்று முடிவு எடுத்துள்ளார் நாயுடு.
நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ராயலசீமா பகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது. எனவே அவருக்கு ராயலசீமா பகுதியை ஒதுக்கி உள்ளனர். ஜூனியர் என்.டி.ஆருக்கு கடலோர ஆந்திராவை ஒதுக்கி உள்ளனர். ஹரிகிருஷ்ணாவுக்கு தெலுங்கானா பகுதியை ஒதுக்கி உள்ளனர்.
இவர்களை தவிர இன்னும் ஏராளமான நடிகர்- நடிகைகளை தெலுங்கு தேசம் கட்சிக்கு இழுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதிக அளவில் நடிகர்- நடிகைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்தினால் சிரஞ்சீவியை முறியடித்து விடலாம் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications