கேரளா: தமிழக சுற்றுலா பயணிகளே அதிகம்
திருவனந்தபுரம்: பிற மாநிலங்களை காட்டிலும் தமிழக சுற்றுலா பயணிகளே கேரளாவிற்கு அதிகம் வருவதாக கேரளா சுற்றுலா துறை இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்
அவர் கூறியதாவது:
கேரள மாநிலத்தின் இயற்கை சூழ்நிலையை ரசிக்க, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர்.
இதனால், கேரள சுற்றுலாத் தலங்கள் குறித்து, தமிழகத்தில் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தாண்டு, இதுவரை 18 லட்சம் பேர் வந்துள்ளனர். இது, கடந்தாண்டை விட 15 சதவீதம் அதிகம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், இந்தாண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாத கணக்கின்படி, 2.34 லட்சம் வெளிநாட்டினர் இங்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளனர்.
கடந்தாண்டு, சுற்றுலா துறை மூலம், ரூ.11,443 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இங்கு பந்த் மற்றும் போராட்டங்கள்தான் சுற்றுலா பயணிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதானால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications