காதர் மொய்தீன் எம்.பி பதவியில் நீடிக்க தடை கோரி வழக்கு
சென்னை: இந்திய யூனியன்முஸ்லீம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. பதவியில் நீடிப்பதை எதிர்த்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தாவூத் மியா கான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக மியா கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் திமுக சார்பில் அதன் சின்னத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய துணைத் தலைவராகவும் காதர் மொய்தீன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு அரசியல் கட்சியாகும். ஏற்கனவே திமுக கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மற்றொரு கட்சியில் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 10க்கு எதிரானது. 2 கட்சிகளில் ஒருவர் செயல்பட முடியாது.
எனவே, அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கக் கோரி சபாநாயகருக்கு மனு கொடுத்தேன். அந்த மனுவை சபாநாயகர் தள்ளுபடி செய்து விட்டார்.
சபாநாயகரின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நான் கொடுத்த மனுவை மீண்டும் பரிசீலிக்க சபாநாயகருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications